Tuesday, January 20, 2009

பாரதிப்பா - பத்மன்

பாரதிப் பா

சொல்லமுதம் சோதிக்கரு சுமந்துவரும் நற்கவிதை
ஞானரதம் நாவில்நட மாடவந்த தோர்புதுமை
என்னதவம் செய்துதமிழ் பெற்றெடுத்த தலைப்பிள்ளை
எங்கணுமே கண்டதில்லை பாரதிபோ லோர்கவியை.

சேமமுற பாரதத்தின் பெருமைகளைச் சொன்னான்
சாபமுற்ற இழிவுகளை கவிதையிலே கொன்றான்
வீரமுற்ற மாதர்குலம் புவிநடத்தப் புகழ்ந்தான்
தாபமுற உலகெங்கும் தமிழ்பரவ நின்றான்.

No comments:

Post a Comment